5 Dead by Flight Accidents சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரேசிலில் மினாஸ் ஜெரைஸ் என்ற மாகாணத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று இட்டாபேவா என்ற இடத்துக்கு அருகே கட்டுப்பாட்டை நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தாகவும், 2 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரேசிலில் மினாஸ் ஜெரைஸ் என்ற மாகாணம் உள்ளது. இங்கிருந்து ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் இட்டாபேவா என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் அங்கு புயலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை விமானம் இழந்தது.இதனால் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
உடனடியாக விமானத்திலிருந்து கடைசியாக சிக்னல் கிடைத்த இடத்துக்கு மீட்பு படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் விமானம் நடுவானிலேயே வெடித்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Kidhours – 5 Dead by Flight Accidents
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.