47 Tigers dead by bird flu சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆசியாவின் வியட்நாம் மிருகக்காட்சிசாலையில் பறவைகாய்ச்சல் காரணமாக 47 புலிகள் உயிரிழந்துள்ளன என மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் 47 புலிகள் உயிரிழந்துள்ளதுடன் மூன்று சிங்கங்களும் இறந்துள்தாகவும் மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை ஹோசிமின் நகருக்கு அருகில் உள்ள வூன்சோய்உயிரியல் பூங்கா மற்றும் லோங் ஒன் மாகாணத்தில் உள்ள மைகுயின் சபாரி பூங்காவிலும் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட கோழிகளின் இறைச்சியை உண்ட விலங்குகள் நோய்வாய்ப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலிகளிடமிருந்து எடுக்கப்பட்ட இரண்டு மாதிரிகளை சோதனை செய்ததில் பறவைக்காய்ச்சல் தொற்று உறுதியாகியுள்ளது.
Kidhours – 47 Tigers dead by bird flu
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.