47 People Buried in the Soil உலக காலநிலை செய்திகள்
தென்மேற்கு சீனாவின் உள்ள லியாங்ஷூய்குன் கிராமத்தில் இன்று (22-01-2024) ஏற்பட்ட நிலச்சரிவில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47 பேர் மண்ணுக்குள் புதைந்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.
![மண்ணுக்குள் புதைந்த 47 பேரின் பரிதாப நிலை 47 People Buried in the Soil 1 47 People Buried in the Soil உலக காலநிலை செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/01/Untitled-design-2024-01-22T173904.788.jpg)
கடந்த சில நாட்களாக இந்த நகரில் கடும் குளிருடன் மோசமான வானிலை நிலவி வந்தநிலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Kidhours – 47 People Buried in the Soil
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.