22 Children died in Thailand சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தாய்லாந்தின் வடக்கு மேற்கு மாகாணமான நோங் புவா லாம் பு என்ற இடத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில்
நுழைந்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20ம் மேற்பட்ட குழந்தைகள் உட்பட அதிகபட்சம் 34 பேர் பலியாகியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது முன்னாள் காவல்துறை அதிகாரி பன்யா கம்ராப் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு வருடம் முன்பு போதைப்பொருள் வழக்கு காரணத்தினால் காவல் துறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அந்த நபர் வண்டியில் வேகமாக வந்து குழந்தைகள் இருக்கும் பகல் நேரக் காப்பகத்தில் நுழைந்துள்ளார். அப்போது அங்கு குறைந்தது 30 குழந்தைகள் இருந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
Another Mass shooting Video From #Thailand , Child Care Centre , At least 38 people killed in #Shooting #Thailand #Thailand #กราดยิงหนองบัวลำภู #Thailand #Thailand #กราดยิง #กราดยิงหนองบัวลำภู #Firing #Shotout pic.twitter.com/C0hl1kZg0H
— Harish Deshmukh (@DeshmukhHarish9) October 6, 2022
நுழைந்த உடனே அங்கு உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை முதலில் சுட்டுள்ளார். அதன் பின்னர் அறையில் இருந்த குழந்தைகளைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த கொடுமையான சம்பவத்தில் 20 மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். மேலும் சுடப்பட்டவர்களில் 8 மாத கர்ப்பிணி ஆசிரியரும் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த நபர் அவரின் வீட்டிற்குச் சென்று அவரின் மனைவி மற்றும் குழந்தையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
இந்த சம்பவத்தைப் பற்றிக் காவல் துறை விசாரணை நடத்திக்கொண்டு வருகின்றது. முதல்கட்ட தகவலின்படி அந்த நபர் கையில் துப்பாக்கி, பிஸ்டல் துப்பாக்கி மற்றும் கத்தி வைத்திருந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் ஒரு போதைப்பொருள் அடிமை என்பதும், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்னால் நீதிமன்றத்தில் நடந்துகொண்டு இருக்கிற அவர் மேல் உள்ள போதைப்பொருள் வழக்கில் ஆஜர் ஆகிவிட்டு வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு குறித்து முழு வீச்சில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Kidhours – 22 Children died in Thailand
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.