tamil kids news சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் 1908-ம் ஆண்டு பிறந்த மார்க்வெஸ் என்கிற 112 வயது நபர் உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதனை கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்துப் பெருமிதம் தெரிவித்துள்ள மார்க்கஸ், தனது வாழ்க்கை குறித்துப் பேசியதாவது: என்னுடைய தகப்பனார் எனக்கும் என்னுடன் பிறந்தவர்களுக்கும் நல்ல ஒழுக்கத்தையும் எண்ணங்களையும் விதைத்துச் சென்றுள்ளார். அனைவருக்கும் நம்மால் இயன்ற அளவு உதவி செய்து வாழவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கர்த்தர் என்னுடன் இருக்கிறார்.

அதனால்தான் நான் இன்னும் ஆரோக்கியமாக உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மார்க்கஸ் பெற்றோருக்கு மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தையாக பிறந்த மார்க்கஸ் மூன்று ஆண்டுகள் மட்டுமே பள்ளியில் பயின்றுள்ளார். ரோமானியாவைச் சேர்ந்த டுமிட்ரூ கோமானெஸ்கூ என்கிற 111 வயதான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நபர் கடந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி காலமானார். இதனையடுத்து இந்த சாதனையை மார்க்கஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
kidhours – tamil kids news
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.