Tamil Kids New UN சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் மக்கள் புரட்சியை அடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். இதையடுத்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச அமைப்புகளிடம் உதவிகளைப் பெற இலங்கை தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கை கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாகவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
அந்நாட்டில், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடுமையாக பொதுமக்கள் அவதியை சந்தித்து வருகின்றனர். இதன் தாக்கம் குறிப்பாக அந்நாட்டின் குழந்தைகளை பாதித்துள்ளதாக ஐநா சபை ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐநா சபையின் அங்கமான யுனிசெப் அமைப்பு இது குறித்து கூறுகையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் குழந்தைகளின் சுகாதார நலன் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
அந்நாட்டில் பல்வேறு குடும்பங்கள் முறையாக உணவு உண்பதற்கே வழியின்றி தவிக்கின்றனர். அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் பல குழந்தைகள் பட்டினியுடன் இரவு படுக்க செல்கின்றனர்.
தெற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலை பல குழந்தைகளின் நலன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை மற்ற நாடுகள் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்நாட்டு குழந்தைகளை காக்க அவசர தேவையாக 25 மில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது என யுனிசெப் அமைப்பு கவலை தெரிவிக்கிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி,
இலங்கையில் உள்ள மொத்தம் 5.7 லட்சம் இளம் குழந்தைகளில் 1.27 லட்சம் குழந்தைகளுக்கு உட்டசத்து குறைபாடு உள்ளது. தற்போதைய நெருக்கடி சூழல் இந்த நிலையை மேலும் மோசமடைய வைத்துள்ளது.
kidhours – Tamil Kids New UN
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.