Tamil Kids New France People சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரான்ஸின் பல இடங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட பொது நீச்சல் தடாகங்கள் (piscines publiques) மூடப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மின்சார கட்டண அதிகரிப்பை காரணம் காட்டி இல் து பிரான்ஸ் உட்பட நாடு முழுவதும் 30 நீச்சல் தடாகங்கள் மூடப்பட்டுள்ளன. மின்சார கட்டணம் பல மடங்காக அதிகரித்துள்ளதை அடுத்து, பலத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 30 நீச்சல் தடாகங்களில் நான்கு இல்-து-பிரான்சுக்குள் உள்ளது. வெர் மெரின் என்ற நிறுவனத்தினால் இயக்கப்படுகின்ற நீச்சல் தடாகங்களே திங்கட்கிழமை காலை முதல் மூடப்பட்டுள்ளன.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட உடனடி விளைவுகளில் இதுவும் ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் தடாகங்களின் எரிசக்திக் கட்டணங்கள் 15 மில்லியனில் இருந்து 100 மில்லியன்களாக அதிகரித்துள்ளது என்று வெர் மெரின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனாலேயே அவற்றை மூடிவிடத் தீர்மானிக்கப்பட்டது என்று அது விளக்கமளித்துள்ளது. பிரான்ஸின் பல நகரங்களில் உள்ளூர் நகர நிர்வாகங்களுடன் கலந்தாலோசிக்காமல் நீச்சல் தடாகங்களைத் திடீரென மூடிய செயலுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
பிரான்ஸ் நீச்சல் சம்மேளனம் (la Fédération française de natation) மூடப்பட்ட முப்பது நீச்சல் தடாகங்களையும் உடனடியாகத் திறக்குமாறு கேட்டிருக்கிறது. நீச்சல் பயிற்சி பெறுகின்ற சிறுவர்களும் வளர்ந்தோரும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது.
Vert Marine company பிரான்ஸில் 90 க்கு மேற்பட்ட பொது நீய்ச்சல் தடாகங்களை இயக்கிவருகிறது. இது ஒரு தற்காலிக முடிவு என அறிவித்துள்ள அதன் உரிமையாளர்கள், அரசு விரைவாக இதற்கு மாற்று வழி உருவாக்கித் தரவேண்டும் எனவும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Kids New France People
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.