New COVID Variant சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தென்கிழக்காசிய நாடான சீனாவின் யுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு பின் அது உலக அளவில் பரவியதில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இவ்வாறான ஒரு நிலையில் எக்ஸ்இசி வேரியண்ட் (XEC variant) என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.புதிய வகை கொரோனா ஜூன் மாதத்தில் ஜெர்மனியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது,
அதன் பின்னர் பிரித்தானியா, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிக தாக்கம் கொண்ட இந்த புதிய வகை தொற்று தொடர்பில் பிரித்தானியாவில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், உலகின் மற்ற நாடுகளுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Kidhours – New COVID Variant
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.