Mysterious object சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தில் உள்ள ஹமாமட்சு நகரின் கடற்கரையில் மர்மமான பந்து போன்ற பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அந்த மர்ம பொருளை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்,
உள்ளூர் ஊடக அறிக்கையின் படி இது ஒருவித கடல் சுரங்க பொருளாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கவலைப்படுகிறார்.

உள்ளூர் பெண் ஒருவரால் முதன் முதலில் பார்க்கப்பட்ட இந்த பொருள், சுமார் 1.5 மீட்டர் (4.9 அடி) விட்டம் கொண்டதாகவும், அதன் மேற்பரப்பில் உள்ள துருவின் அடிப்படையில் இது இரும்பால் ஆனது என்றும் நம்பப்படுகிறது.எனினும், கரை ஒதுங்கியுள்ள உலோகத்தின் தன்மை இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இந்நிலையில் ஜப்பானிய தற்காப்பு படைகள் அந்த பொருளை ஆய்வு செய்ய வரவழைக்கப்பட்டுள்ளனர்.மேலும், ஜப்பானிய பொலிஸார் கரை ஒதுங்கியுள்ள மர்மமான பந்து போன்ற உலோகப் பொருளை முழுமையாக ஆய்வு செய்ய குழு ஒன்றை அனுப்புமாறு இராணுவத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜப்பானிய கடலோரக் காவல்படை இன்னும் இந்த பொருள் என்ன என்பதைக் கண்டறிய வில்லை என ஸ்புட்னிக் அறிக்கைகள் தெரிவித்துள்ளது.
Kidhours – Mysterious object
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.