Thuthuvalai தூதுவளை Solanum Trilobatum in Tamil – மூலிகைகளை சேகரிப்போம்
துதூவளை கொடி இனத்தைச் சேர்ந்தது. தனி பந்தலிலும் படரும். மரத்தின் மேலும், வேலியின் மீதும் படரும். இதன் இலை கோவை இலையைப் போல, ஆனால் கனமில்லாமலிருக்கும்.
இலையின் மேல் பல முட்கள் முளைத்திருக்கும். இதன் பூ கத்தரிப் பூவைப் போல ஊதா நிறத்துடன் கூடியதாக இருக்கும். காய் குண்டு குண்டாக சுண்டைக்காய் போலிருக்கும். இது ஆங்கிலத்தில் Solanum Trilobatum என அழைக்கப்படுகின்றது.
இது கத்திரி குடும்பத்தைச் சேர்ந்தது. எனவே கத்திரி, சுண்டைக்காய், தக்காளி போன்ற வற்றிற்கான பொதுவான குணங்கள் இதிலும் காணப்படும்.

சமீப காலம் வரை தட்டுப் பாடாக கிடைப்பதற்கு அரிதாக இருந்த தூதுவளை இப்பொழுதெல்லாம் எளிதாக நகரங்களிலுள்ள காய்கறி அங்காடிகளில் சுத்தம் செய்யப்பட்டு பாக்கெட்டுக்களில் கிடைக்கின்றது.
தூதுவளை பொதுவாக லேகிய வடிவில் தமிழ் மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடியது. ஆனால் அது உண்மையான தூதுவளையால் செய்யப்பட்டது தானா என்ற சந்தேகம் எழுபவர்கள் அதனைத் தவிர்த்து தங்கள் வீடுகளிலேயே வாரம் ஒரு முறை சமையலில் சேர்த்து வர சிறந்த நற்பலன்களைத் தரும்.
தூதுவளை அனேகமாக அனைத்து இருமல், சளி மருந்துகளிலும் சேர்க்கப்படும் ஒரு மூலிகையாகும்.
தூதுவளையின் முக்கிய குணம் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கக் கூடியது. தூதுவளையை உட்கொண்டால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் அதனால் உடலின் உள் உள்ள சளி வெளியேறும் இருமல் நீங்கும்.
கப நாடி, கப தோஷம் உடையவர்கள் தூதுவளையை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். இறப்பு இரைப்பு, ஆஸ்துமா, ஒவ்வாமை, அலர்ஜி, சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், சைனஸ், ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனை உடையவர்களுக்கு தூதுவளை ஓர் அற்புதமான மூலிகையாகும்.
Kidhours – Thuthuvalai
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.