Sunday, February 2, 2025
Homeசிறுவர் செய்திகள்சுரங்கத்தில் திடீர் தீ விபத்து! 32 பேர் பலி Mine Fire Incident

சுரங்கத்தில் திடீர் தீ விபத்து! 32 பேர் பலி Mine Fire Incident

- Advertisement -

Mine Fire Incident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கஜகஸ்தானில் உள்ள சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 32 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்தெரிவித்துள்ளன.

குறித்த தீ விபத்தானது கோஸ்டென்கோ நிலக்கரி சுரங்கத்தில் நேற்று(29) இரவு இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

மீத்தேன் வாயு கசிவால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.மேலும் 252 பேர் பணி புரியும் குறித்த சுரங்கத்தில் 32 பேர் பலியாகியுள்ளதோடு , 14 பேர் காணாமல் போயுள்ளனர்.18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- Advertisement -

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 பேர் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் சுரங்க நடவடிக்கைகளை தேசியமயமாக்கும் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்ட அதே நாளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கஜகஸ்தானில் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தால் இயக்கப்படும் தளத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த இரண்டாவது மரண சம்பவம் இதுவாகும்.

Mine Fire Incident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Mine Fire Incident  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ஓகஸ்ட் மாதத்தில், கரகண்டா சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீ விபத்திற்கு கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – Mine Fire Incident

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.