Saturday, November 30, 2024
Homeசிறுவர் செய்திகள்நாணயத்தாள்களில் மெஸ்சி Messi on Currency

நாணயத்தாள்களில் மெஸ்சி Messi on Currency

- Advertisement -

Messi on Currency சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை வென்ற ஆர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சியின்(Lionel Messi) புகைப்படத்தை, அந்நாட்டு கரன்சியில்(அர்ஜென்டின் பெசோ) வெளியிட ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்ஜென்டினாவின் கரன்சி, ‘ஆர்ஜென்டின் பெசோ’ என அழைக்கப்படுகிறது. உலக கோப்பை கால்பந்து தொடரில் 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் கோப்பை வென்ற உற்சாகத்தில் ஆர்ஜென்டினா உள்ளது.

- Advertisement -
Messi on Currency சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Messi on Currency சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதற்கு முன்னர் அந்த அணி 1978இ ல் தான் அந்த அணி கோப்பை வென்றிருந்தது. இதனால், ஆர்ஜென்டினா உற்சாகத்தில் மிதக்கிறது.

- Advertisement -

கோப்பையுடன் தாயகம் திரும்பிய கேப்டன் மெஸ்சி(Lionel Messi), ஏஞ்சல் டி மரியா(Angel Day Maria) உள்ளிட்டோரை காண இலட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டனர்.

வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக வந்தனர். இந்நிலையில், உலக கோப்பையை பெற்று தந்த கேப்டன் மெஸ்சியை(Lionel Messi) கௌரவிக்கும் வகையில், ஆர்ஜென்டினா கரன்சி நோட்டுகளில் அவரது படத்தை அச்சிட அந்நாட்டு வங்கி ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக அந்நாட்டு நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியில், ஆர்ஜென்டினா பணமதிப்பின்படி ஆயிரம் நோட்டு கரன்சியில் மெஸ்சியின் படத்துடன், 1,000 என்பதை ‘IO’ என அச்சடிக்கவும்,

பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி(Lionel Scaloni)யை கௌரவிக்க, கரன்சியில், அவரது பெயரை குறிக்கும் “La Scaloneta” என்ற வார்த்தையை அச்சிடுவது குறித்தும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Kidhours – Messi on Currency

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.