Tamil Kids Medicine News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவின் சஸ்கட்ச்வானில் சிறுவர்களுக்கான சில மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது.
அட்வில் (Advil ) மற்றும் தலினோல் (Tylenol ) போன்ற மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சஸ்கட்ச்வானின் அநேகமான மருந்தகங்களில் இந்த இரண்டு வகை மருந்துப் பொருட்களையும் கொள்வனவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
விநியோகச் சங்கிலி பிரச்சினை மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளினால் இவ்வாறு மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வகைகளே இவ்வாறு தட்ப்பாடாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிரம்பலை விடவும் கூடுதல் அளவில் கேள்வி காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பெற்றோர் கூடுதல் எண்ணிக்கையில் இந்த வகை மருந்துப் பொருட்களை களஞ்சியப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
kidhours – Tamil Kids Medicine News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.