Sunday, July 7, 2024
Homeபொழுது போக்குமதிநுட்பங்கள்அறிமுகமானது குறைந்த விலையில் ஜியோ லேப்டாப் Lowest Cost Laptop

அறிமுகமானது குறைந்த விலையில் ஜியோ லேப்டாப் Lowest Cost Laptop

- Advertisement -

Lowest Cost Laptop  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது அந்நிறுவனம் விலை மலிவான லேப்டாப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

Lowest Cost Laptop  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Lowest Cost Laptop  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

லேப்டாப்பின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை அரசு இ-மார்க்கெட்பிளேஸ் போர்ட்டலில் பட்டியலிடப்பட்டுள்ளது, ஜியோ குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 11.6 இன்ச் நெட்புக் என பட்டியலிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பின் விலை ரூ.19,500 (இந்திய ரூபாய்) ஆகும்.

- Advertisement -

ஜியோவின் இந்த லேப்டாப்பானது முன்னரே சந்தையில் விற்பனைக்கு வந்த போதிலும் இதனை எல்லா மக்களாலும் வாங்க முடியாத சூழ்நிலை இருந்தது, ஏனெனில் அரசாங்கத் துறைகள் மட்டுமே GeM போர்ட்டல் வழியாக ஷாப்பிங் செய்ய முடியும். அதனால் இதனை மற்றவர்களால் வாங்க முடியாமல் போனது.

- Advertisement -

ஆனால் இப்பொழுது இந்த லேப்டாப் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வரப்போகிறது, தீபாவளி பண்டிகை சமயத்தில் இது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்க இ-மார்க்கெட்பிளேஸ் இணையதளத்தில் இந்த லேப்டாப்பின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 665 ஆக்டா-கோர் மூலம் இயக்கப்படுகிறது, மெட்டாலிக் ஹிங்கிஸ் உள்ளது மற்றும் சாஸ்ஸிஸ் ஏபிஎஸ் பிளாஸ்டிக்கால் உருவானது.

இந்த ஜியோ லேப்டாப் 2ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம்-ஐ கொண்டுள்ளது, ரேம் 32ஜிபி இஎம்எம்சி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளேவை பொறுத்தவரை 11.6 இன்ச் ஹெச்டி எல்இடி பேக்லிட் ஆன்டி-க்ளேர் டிஸ்ப்ளே உள்ளது மற்றும் 1366×768 பிக்சல்கள் ரிசல்யூஷனை கொண்டுள்ளது.

யூஎஸ்பி 2.0 போர்ட், யூஎஸ்பி 3.0 போர்ட் மற்றும் ஹெச்டிஎம்ஐ ஆகிய போர்ட்களுடன் வருகிறது ஆனால் இந்த லேப்டாப்பில் யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் இல்லை, அதேசமயம் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது.

இதில் புளூடூத் 5.2 வெர்ஷனுடன் வருகிறது மற்றும் வயர்லெஸ் இணைப்பு வைஃபை 802.11ac ஆல் ஆதரிக்கப்படுகிறது.

மேலும் இந்த லேப்டாப்பில் 4ஜி மொபைல் பிராட்பேண்ட் இணைப்பு, இரண்டு ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு மைக்ரோஃபோன்களுடன் வருகிறது. ஒரு வருட உத்திரவாதத்துடன் கூடிய இந்த லேப்டாப் 55.1-60Ah பேட்டரி திறனுடன் 8 மணி நேர பேக்கப் கிடைக்கிறது மற்றும் இதன் மொத்த எடை 1.2 கிலோவாகும்.

 

Kidhours – Lowest Cost Laptop

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.