Lightning Strike on Football Player உலக காலநிலை செய்திகள்
இந்தோனியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோக ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலி வாங்கி மைதானத்தில் நேற்று முன்தினம் (11-02-2024) FLO FC பாண்டுங் மற்றும் FBI சுபாங் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.குறித்த இந்த போட்டி நடந்து கொண்டிருக்கும் போது கால்பந்து வீரர் ஒருவர் மீது திடீரென மின்னல் தாக்கியதில் சுருண்டு விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் இச்சம்பவத்தில் 35 வயது வீரர் ஒருவரே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சக வீரர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
Kidhours – Lightning Strike on Football Player
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.