Thirukkural 100 தினம் ஒரு திருக்குறள் ..
அறத்துப்பால்/ இல்லறவியல் /இனியவை கூறல்
”இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.”
![''இனிய உளவாக இன்னாத கூறல்.......''தினம் ஒரு திருக்குறள் கற்போம்... Thirukkural 100 1 Thirukkural ,daily Thirukkural ,குறலின் பின்னணி , திருக்குறள், தினம் ஒரு குறள், திருக்குறள் விளக்கம், Thirukural , Thiruvalluvar , Thinamum Thirukural , Thirukkural Vilakkam , Thirukkural , Thirukkural Background , Thiruvalluvar , திருக்குறளின் சிறப்புகள், திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு , திருக்குறள் சொல்லும் அம்மா , திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை, தினம் ஒரு திருக்குறள் கற்போம், daily thirukkural, today kural , thirukkural world , global thirukkural](https://www.kidhours.com/wp-content/uploads/2022/12/thinam-oru-kural-kidhours-4-1.jpg)
இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும், காயைத் தின்பது போன்றதே!
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .
—மு. வரதராசன்
மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
—சாலமன் பாப்பையா
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 100
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.