Tamil Kids Latest News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பல்லுயிர் பெருக்க கூடாரமாக அந்தமான் நிக்கோபார் தீவுகள் விளங்குகின்றன. அங்கு 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டபோது விசித்திரமான புதிய வகை ஆல்கே ஒன்றை சேகரித்துள்ளனர். அதனை 2 ஆண்டுகளுக்கும் மேலாக பரிசோதனை செய்தபோது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தாவர இனங்களுடன் ஒத்துப்போகவில்லை. இது அவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த பூஞ்சையை ஆய்வுக்குட்படுத்திய ஆய்வாளர்கள், புதிய தாவர இனம் என்பதை உறுதி செய்துள்ளனர்.
புதிய தாவர இனத்தின் தோற்றமே வித்தியாசமாக இருந்ததால், இதனை அடையாளப்படுத்துவது ஆய்வாளர்களுக்கு சவாலாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆய்வு இந்திய ஜர்னல் ஆஃப் ஜியோ மரைன் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதிய ஆல்கேவுக்கு அசிடபுலேரியா ஜலகன்யாகே (Acetabularia jalakanyakae) எனப் பெயரிட்டுள்ளனர்.
சமஸ்கிருதப் பெயரான ஜலகன்யாகவே என்றால் ஆங்கிலத்தில் Mermaid எனத் தெரிவித்துள்ளனர். அதாவது ‘கடல் கன்னி or கடல் தேவதை’ என்று பொருள். டேனிஷ் எழுத்தாளர் உருவாக்கிய கற்பனைக் கதாப்பாத்திரமான மெர்மெய்ட் என்ற கதாப்பாத்திரத்தோடு இணைத்துப் பார்த்து அதற்கேற்ப பெயரிட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளனர்.
விசித்திரமான அம்சம் என்னவென்றால், ஒரே செல் கொண்ட ஒற்றை நியூக்கிளியஸால், இந்த தாவரத்தின் மூலக்கூறு கூட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது குறித்து பேசிய ஆய்வாளர்கள், கடந்த 40 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பூஞ்சை இனம் எனக் கூறியுள்ளனர். ஆய்வை தலைமையேற்று நடத்திய முனைவர் ஃபெலிக்ஸ் பஸ்ட் கூறும்போது, 2019 ஆண்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அப்போது, விசித்திரமான தோற்றத்தில் இருந்த பூஞ்சையை சேகரித்தாகவும், அதன் தோற்றமே தங்களை கவர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
கல்லூரிக்கு திரும்பிய பிறகு, எந்த தாவர இனத்தைச் சேர்ந்தது என்பதை கண்டறிய முற்படும்போது, ஏற்கனவே இருக்கும் தாவர இனங்களின் டி,ஏன்.ஏவுடன் இந்த தாவரம் ஒத்துப்போகவில்லை எனக் கூறினார். சுமார் 18 மாதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் புதிய தாவர இனம் என்ற முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ள அவர், அதற்கு அசிடபுலேரியா ஜலகன்யாகே எனப் பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகவும் நல்ல எஞ்சியிருக்கும் பவளப் பாறைகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், அங்கு பல்வேறு பூஞ்சை இனங்கள் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், துர்திஷ்டவசமாக கடலில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக அந்தப் பவளப்பாறைகள் மற்றும் அரிய தாவர இனங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் முனைவர் பெலிக்ஸ் பஸ்ட் தெரிவித்துள்ளார். ஏனென்றால், வெப்பநிலை அதிகரிக்கும்போது ஆக்ஸிஜன் அளவு குறையும். அப்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அரியவகை இனங்கள் நீடித்து வாழ முடியாத நிலை ஏற்படும்.
kidhours – Tamil Kids Latest News,Tamil Kids Latest News best search
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.