Tamil Kids Latest News Space சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ரஷ்யாவின் பிரிவில் திடீரென புகை வந்தது. வீரர்கள் துரிதமாக செயல்பட்டு புகையை அணைத்தனர்.
விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உட்பட 13 நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில், இந்த அணியில் இருந்து விலகிய சீனா, தனியாக புதிய விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், சுழற்சி முறையில் உறுப்பு நாடுகளின் விண்வெளி வீரர்கள் சென்று 6 மாதங்கள் தங்கி ஆய்வில் ஈடுபடுகின்றனர். தற்போது, இதில் ரஷ்யாவின் 2 வீரர்கள் உட்பட 7 பேர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆய்வு மையத்தில் உள்ள ரஷ்யாவின் பிரிவில் திடீரென புகை வந்தது. உடனே, தீ விபத்தை எச்சரிக்கும் கருவிகள் ஒலி எழுப்பின. வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, பிளாஸ்டிக் சாதனங்களில் இருந்து வெளியான அந்த புகையை சிறப்பு கருவிகளின் மூலம் அணைத்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ரஷ்ய வீரர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி, விண்வெளியில் நடந்து சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.
kidhours – Tamil Kids Latest News Space
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.