Friday, November 22, 2024
Homeசிறுவர் செய்திகள்இந்த நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டுகள் பயணத் தடை Tamil Kids latest News...

இந்த நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டுகள் பயணத் தடை Tamil Kids latest News Tamil World Best News

- Advertisement -

Tamil Kids latest News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய மாறுபாடுகளின் பரவலைத் தடுக்க, அரசாங்கத்தின் `சிவப்பு பட்டியலில்’ இருக்கும் நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள் மீது மூன்று ஆண்டு பயணத் தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா கூறியுள்ளது.

பெயரிடப்படாத உள்துறை அமைச்சக அதிகாரியை மேற்கோள் காட்டி மாநில செய்தி நிறுவனம் எஸ்.பி.ஏ, மார்ச் மாதம் 2020 முதல் முதல் முறையாக அதிகாரிகளின் முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட சில சவுதி குடிமக்கள் பயண விதிமுறைகளை மீறியதாகக் கூறினார்.

- Advertisement -

“இதில் சம்பந்தப்பட்டதாக நிரூபிக்கப்பட்டவர்கள் திரும்பியவுடன் சட்டப்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிகக் வெண்டும். அவர்கள் கடுமையான அபராதங்களுக்கு உட்படுத்தப்படுவதோடு மூன்று வருடங்களுக்கு அவர்களது பயணத்திற்கு தடை விதிக்கப்படும்” என்று அந்த அதிகாரி கூறினார்.ஆப்கானிஸ்தான் (Afghanistan), அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, லெபனான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, துருக்கி, வியட்நாம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் செய்ய சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.

- Advertisement -
Tamil Kids latest News
Tamil Kids latest News

“குடிமக்கள் நேரடியாகவோ அல்லது வேறொரு நாடு வழியாகவோ இந்த பட்டியலில் உள்ள நாடுகளுக்கோ அல்லது தொற்றை கட்டுப்படுத்தாத அல்லது புதிய மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ள பிற நடுகளுக்கோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வலியுறுத்துகிறது” என்று அந்த அதிகாரி கூறினார்.

சுமார் 30 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் (Saudi Arabia) செவ்வாயன்று 1,379 பேர் புதிதாக கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதனுடன் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 520,774 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 8,189 ஆக உயர்ந்துள்ளது.

 

kidhours – Tamil Kids latest News,Tamil Kids latest

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.