Tamil Kids Latest News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகின் மிக பிரபலமான தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலன் மஸ்க் நடத்தும் இன்ஸ்பிரேஷன் 4 (Inspiration4), வியாழக்கிழமை, தனது முதல் சிவிலியன் மிஷனை (பொது மக்களின் பயணுத்துக்கான விண் வாகனம்) விண்வெளி சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியது. இது விண்வெளித்
துறையில் ஒரு மிகப் பெரிய முன்னேற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
SpaceX நிறுவனத்தின், இன்ஸ்பிரேஷன் 4 என பெயரிடப்பட்டுள்ள, தொண்டு நோக்கம் கொண்ட இந்த மிஷன், இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 16) காலை 5:30 மணிக்கு செலுத்தப்பட்டது. புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செலுத்து காம்பிளக்ஸ் 39A-விலிருந்து ஸ்பேஸ்எக்ஸ்-சின் ஃபால்கன் 9 ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலத்தின் மூலம் இது செலுத்தப்பட்டது.
தொழில்நுட்ப தொழில்முனைவோரான ஜாரெட் ஐசக்மனால் கட்டளையிடப்பட்ட இந்த மிஷனின் பொறுப்புகளை செயின்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனையின் மருத்துவ உதவியாளர் ஹேலி அர்செனாக்ஸூம் ஏற்றுள்ளார். மிஷன் ஸ்பெஷலிஸ்ட் கிறிஸ் செம்ப்ரோஸ்கி, ஒரு விமானப்படை வீரர் மற்றும் விண்வெளி தரவு பொறியாளர் ஆவார். மிஷன் பைலட் டாக்டர் சியான் ப்ரோக்டர், ஒரு புவியியலாளர், தொழில்முனைவோர் மற்றும் பயிற்சி பெற்ற விமானி என்பது குறிப்பிடத்தக்கது.

“டிராகனின் முதல் ஆல்-சிவிலியன் விண்வெளிப் பயணத்தின் இன்றைய பால்கன் 9 ஏவுதலுக்கு அனைத்து அமைப்புகளும் வானிலையும் ஏற்றதாக இருக்கின்றன” என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செலுத்தலுக்கு முன்பு ஒரு ட்வீட்டில் தெரிவித்தது.
ஸ்பேஸ்எக்ஸ் ஐந்து மணி நேர லாஞ்ச் விண்டோவை இலக்காக கொண்டுள்ளது. ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் தனிப்பயனாக்கப்பட்ட விமானப் பாதையில் SpaceX இன் க்ரூ டிராகன் காப்ஸ்யூலில் கிரகத்தைச் சுற்றி வரும்.
ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி பழுதுபார்க்கும் பணிகளுக்குப் பிறகு, எந்த ஒரு மனித விண்வெளி திட்டத்திலும் எட்டப்படாத வகையில், இந்த மிஷன், மூன்று நாட்களில் சுமார் 575 கிமீ சுற்றுவட்டப்பாதையை இலக்காக கொண்டுள்ளது.
மூன்று நாள் பயணத்தின் முடிவில், டிராகன் மற்றும் இன்ஸ்பிரேஷன் 4 குழுவினர் புளோரிடா கடற்கரையில் ஒரு இலகுவான தரையிறங்கல் மூலம் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவார்கள்.
“#இன்ஸ்பிரேஷன் 4 எதிர்காலத்திற்கான நமது நோக்கத்தை உள்ளடக்கியுள்ளது. இதில் தனியார் நிறுவனங்கள் சரக்குகள் மற்றும் மக்களை லோ எர்த் ஆர்பிட்டுக்கு கொண்டு செல்ல முடியும். பறப்பதற்கான அதிக வாய்ப்புகள், அறிவியலுக்கான அதிக வாய்ப்புகள்” என்று நாசா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
“உங்கள் ஆதரவுக்கு நன்றி. இதுதான் #இன்ஸ்பிரேஷன் 4-ன் முக்கிய நோக்கம்” என்று இன்ஸ்பிரேஷன் 4 நாசாவின் (NASA) ட்வீட்டுக்கு பதிலளித்தது.
செலுத்தலுக்கு முன்னர் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் (Elon Musk) குழுவினரை சந்தித்தார்.
“இந்த செலுத்தலுக்கு முன்னர் #Inspiration4 குழுவினரை வந்து பார்த்ததற்கு நன்றி” என்று இன்ஸ்பிரேஷன் 4 ட்வீட் செய்தது.
இன்ஸ்பிரேஷன் 4 இன் குறிக்கோள் மனிதகுலத்தை ஊக்குவிப்பதும் செயின்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு பணம் திரட்டுவதும் ஆகும்.
உலகம் முழுவதும் உள்ள பலர் இந்த செலுத்தலை ஆர்வமாக கண்டனர். இதற்கிடையில், ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனை குழுவும் தங்கள் கோரிக்கையை விடுத்தது.
“நீங்கள் @inspiration4x ஸ்ட்ரீமைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, செயின்ட் ஜூட் -க்கு நன்கொடை அளிக்க விரும்புகிறீர்களா?” என அந்த மருத்துவமனை ட்வீட் செய்தது.
“ஒவ்வொரு டாலரும் மிகச் சிறந்த முறையில் பயன்படும். உங்கள் நன்கொடை நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று மருத்துவமனை மேலும் கூறியது.
சுற்றுவட்டப் பாதையில் தங்கள் பல நாள் பயணத்தின் போது, இன்ஸ்பிரேஷன் 4 குழுவினர் பூமியில் மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
kidhours – Tamil Kids Latest News,Tamil Kids Latest News kidhours,Tamil Kids Latest News best
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.