Tamil Kids Latest News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வடகொரியா நீண்ட தூர பயண ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது. இந்த செய்தியை அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்தது. வார இறுதியில், இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் உலகிற்கு அறிவித்துள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த ஏவுகணை பரிசோதனைகள் தண்ணீருக்கு மேல் 1,500 கிலோமீட்டர் பயணம் செய்ததாக கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஏவுகணைகள் “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாய ஆயுதம்” என்றும் “மற்றொரு தடுப்பு” என்றும் கிம் ஜோங் உன் தலைமையிலான வட கொரியா கூறுகிறது. குறுகிய தொலைவு ஏவுகணையை வடகொரியா (North Korea) மார்ச் மாதத்தில் பரிசோதித்தது குறிப்பிடத்தக்கது.நாட்டின் தேசிய தினத்தை கொண்டாடும் வகையில் முன்கூட்டியே பியோங்யாங்கில் ராணுவ அணிவகுப்பை கிம் ஜாங்-
உன் ஆட்சி நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த ஏவுகணை சோதனைகள் வந்துள்ளன. மார்ச் மாதத்தில், வட கொரியா ஒரு தந்திரோபாய வழிகாட்டப்பட்ட (tactical guided projectile) ஏவுகணையை சுட்டு பரிசோதித்தது. அது, 600 கிமீ தொலைவில் ஒரு இலக்கை அடைந்ததாக வட கொரிய அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
எனினும் 2017ம் ஆண்டுக்கு பிறகு கிம் ஜோங் உன்னின் ஆட்சி, அணுசக்தி அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை எதையும் நடத்தவில்லை.இந்த ஏவுகணை சோதனைகளின் பகுப்பாய்வை மேற்கொள்வதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஏவுகணை சோதனைகள் “விரோதப் படைகளின் ராணுவ சூழ்ச்சிகளை எதிர்கொள்ளும்” என்றும் KCNA கூறியிருக்கிறது.
விமான சோதனைகள், கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதல் சோதனைகள் உள்ளிட்ட ஏவுகணை பகுதிகளின் விரிவான சோதனைகளை வட கொரிய அதிகாரிகள் (North Korean authorities) மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கேசிஎன்ஏ (KCNA) வெளியிட்ட புகைப்படங்கள் டிரான்ஸ்போர்ட்டர்-எரக்டர்-லாஞ்சரில் (transporter-erector-launcher) இருந்து ஏவுகணை ஏவப்பட்டதை காட்டின.
kidhours – Tamil Kids Latest News,Tamil Kids Latest News kidhours
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.