Tamil Kids Latest News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
விண்வெளி ரசிகர்களை வியக்க வைக்கும் அளவுக்கு ஒரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தொடர்பிலான தகவலை நாசா வெளியிட்டுள்ளது.
அதாவது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தற்போது இருக்கும் விண்வெளி வீரர் மேகன் மெக் ஆர்தரின் என்பவர் தனது பிறந்தநாளை விண்வெளியில் கொண்டாடியுள்ளார் என்பதுதான் அது.
இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களின் சில படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பில் மேகன் மெக் ஆர்தருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ,
![பூமிக்கு வெளியே பிறந்த நாள் கொண்டாட்டம் Tamil Kids Latest News 1 Tamil Kids Latest News](https://www.kidhours.com/wp-content/uploads/2021/09/Nasa1.jpg)
“எனது Expedition 65 குழு நண்பர்களுடன் சிறப்பான பிறந்தநாள் டின்னர்! என் ஸ்பேஸ் பிரதர்சுடன் பிறந்தநாள் நன்றாக சென்றது. ம் டின்னர் பார்ட்டியில், சீஸ் கொண்ட க்வெஸாடில்லாஸ் மற்றும் டார்ட்டில்லா-பீஸ்ஸாக்கள்! குக்கீ டெகரேட்டிங்! “மெழுகுவர்த்திகள்” கொண்ட சாக்லேட் கேக்! ஆகியவை உள்ளன. நாங்கள் இன்னும் ஐஸ்கிரீம் பேக்கை திறக்கவில்லை, அதனால் 2 வது பார்ட்டி இருக்கிறது என்று அர்த்தம்.” என கேப்ஷன் செய்துள்ளார்.
![பூமிக்கு வெளியே பிறந்த நாள் கொண்டாட்டம் Tamil Kids Latest News 2 Tamil Kids Latest News kidhours.com](https://www.kidhours.com/wp-content/uploads/2021/09/nasa2.jpg)
இந்த பதிவு பகிரப்படத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் வியூஸ்களை பெற்றுள்ளது. அத்துடன் , ட்விட்டர் யூசர்கள் பலர் எண்ணற்ற கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் , விண்வெளி வீராங்கனையின் பிறந்தநாள் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
kidhours – Tamil Kids Latest News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.