Tamil Kids Latest News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மாகாணத்தில் அமைந்துள்ள தி வொயிட் சாண்ட்ஸ் தேசிய பூங்காவில், 23000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆதிகால மனிதர்களின் கால்தடத்தை நிகழ்கால உலகிற்கு வெளிக்காட்டும் புகைப்படம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் பதிவாகவில்லை.
ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த காலடி தடங்களின் வயது 23000 ஆண்டுகள் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.இது நீண்ட நாட்களாக வறண்டு போன ஏரி ஒன்றின் மீது ஆதிகால மனிதர்கள் நடந்து சென்ற போது பதிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
காலடி தடங்களின் அளவுகளை வைத்து பார்க்கும் போது வளர் இளம் பருவ வயதினர் மற்றும் குழந்தைகள் இந்த பாதையில் அதிகளவில் சென்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த காலத்தின் வயதை அந்த தடங்களில் இருந்த விதைகளை கொண்டு கணக்கிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது நியூ மெக்சிக்கோ பகுதி என்றும் தற்போது அந்த பகுதி பாலைவனமாக உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் ஆதி கால மனிதர்கள் இந்த பகுதியில் வாழந்ததற்கான அடையாளத்தை கண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.