Friday, September 20, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புகாலநிலை மாற்றத்தால் அழிந்து வரும் மிகப்பெரிய பவளப் பாறை tamil kids knowledge #...

காலநிலை மாற்றத்தால் அழிந்து வரும் மிகப்பெரிய பவளப் பாறை tamil kids knowledge # world best kids

- Advertisement -

tamil kids knowledge சிறுவர்களுக்கான பொது அறிவு – உளச்சார்பு

- Advertisement -

அவுஸ்திரேலியாவின் பவளப் பாறை

காலநிலை மாற்றத்தால் அழிந்து வரும் அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளப் பாறையை ஆபத்தில் இருக்கும் உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையில், ‘கிரேட் பாரியர் ரீஃப்’ (Great Barrier Reef) என்ற ஒரு பவளப்பாறை கூட்டம் இருக்கிறது. இதன் நீளம் சுமார் 2,300 கிலோமீற்றர் ஆகும்.
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பு இதுதான். இந்த அமைப்பில் 600 வகையான பவளப்பறை வகைகள் இருக்கின்றன.

- Advertisement -

ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார அமைப்பு, உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பை அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.

- Advertisement -

இதன் மூலம், புவி வெப்பமடைதல் குறித்து விரைவான நடவடிக்கை எடுக்க அவுஸ்திரேலியா வலியுறுத்தப்படுகிறது.

tamil kids knowledge காலநிலை மாற்றத்தால் அழிந்து வரும் அவுஸ்திரேலியாபவளப் பாறை
காலநிலை மாற்றத்தால் அழிந்து வரும் அவுஸ்திரேலியாபவளப் பாறை

1981 ஆம் ஆண்டில் உலக பாரம்பரிய தரவரிசையைப் பெற்ற பவளப் பாறையின் நிலை குறித்து யுனெஸ்கோவிற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது. இது 2017 இல் ஆபத்து பட்டியலில் செல்கிறதா என யுனெஸ்கோவில் விவாதிக்கப்பட்டது.

புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் புவி வெப்பமடைதலின் விளைவாக கடல் வெப்பநிலை அதிகரிப்பது பாறைகள் கடுமையாக சேதமடைவதற்கு முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் பாறைகளில் பல நிறம் மாறி வெளுத்துப் போயுள்ளன.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் பவளப் பாறையை பாதுகாக்க முயற்சிகள் எடுத்த போதிலும், பாறைகளில் நீர் தரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய இலக்குகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று யுனெஸ்கோ அறிக்கை கூறுகிறது.

பரிந்துரை பின்பற்றப்பட்டால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக இயற்கையான உலக பாரம்பரிய தளம் ஆபத்து பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

 

kidhours- tamil kids knowledge

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.