Kidnapping Researchers சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பப்புவா நியூகினியில் அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து. பப்புவா நியூகினி ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும் வழிகாட்டிகளும் இக்குழுவில் அடங்கியுள்ளனர் என பொலிஸாரும் ஏனைய அரச அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
எனினும் எத்தனை பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் 4 அல்லது 5 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
![ஆராய்ச்சியாளர்கள் கடத்தல் Kidnapping Researchers 1 Kidnapping Researchers சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/02/Untitled-design-8.jpg)
ஞாயிறு காலை இவர்கள் ஆயுதமுனையில் மலைப்பகுதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இவர்களை விடுவிப்பதற்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் கப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கப்பப்பணம் கோரப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என ஜேம்ஸ் மராப்பே தெரிவித்துள்ளார்.இவ்விடயத்தை பப்புவா நியூகினி அரசாங்கம் மிக கவனமுடன் கையாள்கிறது எனவும் கடத்தப்பட்ட குழுவை விடுவிப்பதற்கு சாத்தியமான அனைத்து நடடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இக்குற்றச்செயல்களை அரசாங்கம் பொறுத்துக்கொள்ள மாட்டாது என்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் எங்கும் ஓட முடியாது எனவும் பிரதமர் மராப்பே கூறியுள்ளார்.
Kidhours – Kidnapping Researchers
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.