Thursday, November 21, 2024
Homeகல்விதமிழ் எழுத்தியல் Tamil Kids Kalvi World Tamil Best Education

தமிழ் எழுத்தியல் Tamil Kids Kalvi World Tamil Best Education

- Advertisement -

Tamil Kids Kalvi – சிறுவர் கல்வி

- Advertisement -

எழுத்தியல்

1.1 உயிர் எழுத்து

- Advertisement -
  • உயிரெழுத்துகள் 12 உள்ளன.
    அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ இவை பிற எழுத்துகளின் துணையின்றி ஒலிக்கக்கூடியவை உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரு வகைப்படும்

(i) குறில் எழுத்துகள் (5) – குறுகிய ஓசை உடையவை
(அ, இ, உ, எ, ஒ)

- Advertisement -

(ii) நெடில் எழுத்துகள் (7) – நெடிய ஓசை உடையவை
(ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ)

1.2 மெய் எழுத்து

  •  மெய் எழுத்துகள் 18 உள்ளன.
    அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகும்.அவை மூன்று வகைப்படும்

(i) வல்லினம் (6) – வலிய ஒலியுடையவை
(க், ச், ட், த், ப், ற் )

(ii) மெல்லினம் (6) – மென்மையான ஒலியுடையவை
(ங், ஞ், ண், ந், ம், ன்)

(iii) இடையினம் (6) – வல்லினம், மெல்லினம் இரண்டுக்கும்
இடைப்பட்ட ஒலியுடையவை
(ய், ர், ல், வ், ழ், ள்)

1.3 உயிர்மெய் எழுத்து

  • உயிர்மெய் எழுத்துகள் 216 உள்ளன.
    உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்வதால் பிறக்கின்ற எழுத்துகளே உயிர்மெய் எழுத்துகளாகும்.

உ + ம் : க் + அ = க
(மெய்) (உயிர்) (உயிர்மெய் எழுத்து)

ச் + ஊ = சூ
(மெய்) (உயிர்) (உயிர்மெய் எழுத்து)

  • உயிர்மெய் எழுத்துகளின் வகைகள்.

வல்லின உயிர்மெய் எழுத்துகள் : 72 எழுத்துகள்
மெல்லின உயிர்மெய் எழுத்துகள் : 72 எழுத்துகள் 216 எழுத்துகள்
இடையின உயிர்மெய் எழுத்துகள் : 72 எழுத்துகள்

  • உயிர்மெய் குறில் : 5 X 18 = 90 எழுத்துகள்
    உ + ம் : க் + உ = கு
    த் + ஒ = தொ
  •  உயிர்மெய் நெடில் : 7 X 18 = 126 எழுத்துகள்
    உ + ம் : க் + ஊ = கூ
    த் + ஓ = தோ

1.4 ஆய்த எழுத்து

  • மூன்று புள்ளிகளைக் கொண்ட எழுத்து வடிவம் ( ஃ )
    உ + ம் . எஃ கு, அஃ து

1.5 தமிழ் நெடுங்கணக்கு

உயிர் எழுத்து              12
மெய் எழுத்து              18
உயிர்மெய் எழுத்து    216
ஆய்த எழுத்து               1
___
மொத்தம்            247

1.6 கிரந்த எழுத்துகள்

  • சமஸ்கிருத ஒலிகளை எழுதுவதற்குத் தமிழில் உருவாக்கப்பட்ட எழுத்துகள் கிரந்த எழுத்துகள் எனப்படும்.
    ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ, க்ஷ ஆகிய ஆறும் கிரந்த எழுத்துகள்.

உ + ம் : ஸர்ப்பம், புஷ்பம், ஹஜி, ஜமாலுடின், பத்து காஜா,
டத்தோ ஸ்ரீ, பக்ஷி.

 

kidhours- Tamil Kids Kalvi

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

Tamil Kids Kalvi

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.