Israel Attacked சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலியப் படையினர் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காஸாவிலிருந்து இஸ்ரேலிய பகுதிகள் மீது ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர், காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில் பலஸ்தீனத்தின் மேற்குக் கரையிலுள்ள நப்லஸ் நகரில் இஸ்ரேலியப் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் பலஸ்தீனியர்கள் 11 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 80 பேர் காயமடைந்துள்ளனர் என பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

காஸா பிராந்தியத்தை ஆளும் ஹமாஸ் அமைப்பின் ஆயுதத் தொழிற்சாலையொன்றும் முகாம் ஒன்றும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் இச்சம்பவம் நடந்து ஒரு நாளின் பின் காஸா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Kidhours Israel Attacked
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.