Pyramid Secret Way பொது அறிவு செய்திகள்
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்தின் கிசாவின் பிரமிடு, 4,500 ஆண்டுகளுக்குப் பிறகும், அதன் ஆயிரக்கணக்கான மர்மத்தை வெளியில் காட்டாமலேயே உள்ளது. அதன் உள்ளே என்ன இருக்கும் என்ற பல யுகங்கள் இருந்துவரும் நிலையில் இப்போது, பிரமிட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஒன்பது மீட்டர் (30 அடி) நீளமுள்ள ஒரு மறைக்கப்பட்ட நடைபாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் இருக்கும் பிரமிடுகள் உள்ளே என்ன இருக்கிறது என்பதை உள்ளே சென்று பார்க்க முடியாத நிலையில் 2015 இல் ஸ்கேன் பிரமிடு ( Scan Pyramids project) என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்மூலம் அகச்சிவப்பு தெர்மோகிராபி (infrared thermography) , 3D உருவகப்படுத்துதல் மற்றும் காஸ்மிக்-ரே இமேஜிங் (cosmic-ray imaging) உள்ளிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைப்பின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
அந்த ஆராய்ச்சியில், பிரமிட்டின் கட்டுமானம் மற்றும் தாழ்வாரத்தின் முன் அமைந்திருக்கும் ஒரு சுண்ணாம்பு கட்டமைப்பு பற்றி தெரியவந்துள்ளது. அதன் பாதையை உற்று ஆராயும்போது, அது ஒரு முடிக்கப்படாத பாதை என்பது தெரியவந்துள்ளது. அந்த பாதை பிரமிட்டில் எதை இணைப்பதற்காக கட்டப்பட்டிருக்கலாம் என்ற ஆராய்ச்சி நடக்கத் தொடங்கியது.
Kidhours – Pyramid Secret Way
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.