Indian Ocean Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இந்தியப் பெருங்கடலில் இன்று (29) காலை 8 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த பகுதியில் 4 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேன தெரிவித்தார்.
முன்னதாக, ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.இந்த நிலநடுக்கங்கள் காரணமாக இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுக்கு அருகில் பதிவாகியுள்ளன. கடலுக்கு அடியில் உள்ள மலைத்தொடரில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Indian Ocean Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.