Healthy of Crying in Tamil சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அழுகை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்டது. கோபத்தில் இருக்கும் ஒருவர். மனம் விட்டு உடனேயே அழுதால், அவரின் ரத்த அழுத்தம் குறையும். லாக்ரிமல் என்ற சுரப்பி கண்ணீரை உருவாக்குகிறது. கண்களை ஆரோக்கிய மாக வைக்கவும் அழுகை உதவுகிறது. கண்ணீரில் லைசோ சைம் என்ற திரவம் உள்ளது.
இது பாக்டீரியாவை கொல்லும் சக்தி வாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண் டுள்ளது. 5 முதல் 10 நிமிடங்கள் அழுவது கூட 90 முதல் 95 சதவீதம் பாக்டீரியாக்களை கண்களில் இருந்து அகற்ற உத வும், வியர்வை, சிறுநீர் உடலில் இருந்து பலநச்சுக்களை வெளி யேற்றுவது போல கண்ணீரும் நச்சுகளை வெளியேற்றும்.
மேலும் கண்ணீர் கண்களில் இருக்கும் சவ்வு வறண்டு போகா மலும் பாதுகாக்கும். இதனால் பார்வை நீண்ட காலத்திற்கு நன்றாக இருக்கும் சரி அழுவது நல்லது தான் என்றாலும், எதற்கெடுத்தாலும் அழுதால் அதுவும் நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் அதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டாம் எனவும் எச்சரிக்கின்றனர்.
இனி உங்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத பிரச்சனைகள் காரணமாக மனம் கடினமாக இருந்தால், கைக்குட்டை வைத்துக்கொள்ளுங்கள். அழுது விடுங்கள்!
Kidhours – Healthy of Crying in Tamil
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.