tamil kids health சுகாதாரம்
கோடைக்காலத்தில் சூரியனின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாம்பழ சீஸனுக்காகவே இதை வரவேற்பது உண்டு. மாம்பழத்தை சாப்பிடுவதால் அதிக நன்மைகள் உண்டு. இதை கோடையின் சூப்பர் ஃபுட் என்று சொல்லலாம்.
மாம்பழத்தின் நன்மைகள் போன்று இதன் தோலும் மிகவும் நன்மை பயக்கும். பெரும்பாலும் மாம்பழத்தின் உள் இருக்கும் கூழ் பகுதியை மட்டும் சாப்பிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் இவற்றிலும் உடலுக்கு வேண்டிய ஆரோக்கியம் நிறைந்துள்ளது.

மாம்பழம் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம், கோலைன் போன்றவற்றின் ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
ஆய்வுகள் மற்றும் சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி மாம்பழத்தோலின் தாவர கலவைகள் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இது பல நோய்களிலிருந்து பாதுகாக்க கூடியவை. இது வயதானதை கூட குறைக்க செய்யும். மாம்பழத்தோல் எப்படி பயனளிக்கிறது என்பதை பார்க்கலாம்.
மாம்பழத்தோலில் அப்படி என்ன இருக்கு?
மாம்பழம் சாப்பிடும் போதெல்லாம் அதன் தோலை நீக்கி உள்ளிருக்கும் கூழ் போன்ற பகுதியை மட்டுமே சாப்பிடுவது வழக்கம். மாம்பழத்தின் உள் இருக்கும் பகுதியை மட்டும் சுவைத்து தோல் பகுதியை வீசி எறிவதுண்டு. ஆனால் மா தோல்களை உங்கள் உணவில் சேர்க்கலாம்.

மாம்பழத்தின் உள்புறம் இருக்கும் சதைப்பற்றை விட மாம்பழ தோல் பல நோய்களை போக்க உதவுகிறது. மாம்பழத்தோலில் அதன் சதைப்பறை விட அதிக ஆன் டி ஆக்ஸிடண்ட் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மாம்பழத்தோல் வைட்டமின்கள், கரோட்டினாய்டுகள், பாலிபினால்கள் ஆகியவற்றின் மூலமாகும்.
kidhours – Tamil Kids Health
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.