Google Translation Disabled in China சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவில் டிரான்ஸ்லேஷன் சேவையை நிறுத்தியது கூகுள்சீனாவில் ஏற்கெனவே
கூகுள் தனது சேவையை நிறுத்தியுள்ள நிலையில் (முழுமையாக அல்ல) தற்போது டிரான்ஸ்லேட் சேவையையும் கூகுள் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் தனது கரங்களை ஆக்டபஸ் போல விரித்துள்ள கூகுள் சீனாவில் தனது டிரான்ஸ்லேட் சேவையை நிறுத்திக்கொண்டதா? என பலரும் ஆச்சரியமடைந்தனர்.
ஏற்கெனவே ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து குட்டு வாங்கியுள்ள கூகுளுக்கு சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியும் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.
பிரபல சர்ச் என்ஜினான கூகுள் உலகம் முழுவதும் தனது கிளையை ஆழமாக பரப்பியுள்ளது. அதாவது நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது கூட கூகுளுக்கு தெரியும்.
ஆனால் என்னதான் ஊருக்கே ராஜாவாக இருந்தாலும், வெளியூர் போனால் அவரும் பயணிதானே! அந்த மாதிரி கடந்த சில ஆண்டுகளாக கூகுள் சீனாவில் தனது சேவையை தொடங்கி நடத்தி வந்திருந்தது. இது எல்லாம் 2010க்கு முன்னர்தான்.
இப்படி இருக்கையில், சீனாவுக்குள் நுழையும் போதே அந்நாட்டின் சட்ட திட்டங்களை கறாராக கடைப்பிடித்தால் மட்டுமே இங்கு இருக்க முடியும் என்று சீனா கூறியிருந்தது.
அது ஏன் அப்படி கூறியது என இப்போது நமக்கு தெரிந்திருந்தாலும் பலர் சீனாவை அப்போது கடுமையாக விமர்சித்தார்கள்.
இதெல்லாம் நடந்து கடைசியில் தாக்குப்பிடிக்க முடியாமல் 2010ல் கூகுள் அங்கிருந்து மூட்டைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டது. ஹேக்கர்கள் தொல்லையால்தான் இவ்வாறு நடப்பதாக கூகுள் காரணம் கூறியது.
கூகுளையே ஹேக் செய்யும் அளவு அங்கு மென்பொறியாளர்கள் இருப்பதன் காரணமாக கூகுளை விட சிறந்த சீன அப்ளிகேஷன்கள் கூகுள் வழக்கும் சேவையை வழங்கின.
அக இப்படியாக தொடர்ந்து கூகுளுக்கும் சீனாவுக்கும் ஏழாம் பொருத்தம் இருந்த நிலையில், தற்போது கூகுள் தனது டிரான்ஸ்லேசன் சேவையையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
கடந்த 2017ல் அந்நாட்டில் கூகுள் இந்த சேவையை தொடங்கியிருந்தது. இவ்வாறு இருக்கையில் ‘Black Panther’ என எழுதினால் ‘கருப்பு பாந்தர்’ என மொழி பெயர்த்த கூகுளை அந்நாட்டு மக்கள் வைத்து செய்திருக்கிறார்கள்
இப்போது இந்த மாதிரி மோசமாக இல்லாம் டிரன்ஸ்லேஷனை கூகுள் மிகவும் மேம்படுத்தியிருந்தாலும், சீன மக்கள் என்னவோ உள்ளூர் செயலிகளையே பெரிதும் நம்பினர். எனவே நுகர்வோர்கள் குறைந்த நிலையில் தனது சேவையை நிறுத்திக்கொள்வதாக கூகுள் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கான ரூபாய் அபராதம், வட கொரியாவிடம் குட்டு என கூகுள் கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கப்பட்ட நிலையில், தற்போது சீனாவில் தனது சேவையை நிறுத்தியுள்ளது அந்நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது
Kidhours – Google Translation Disabled in China , Google Translation Disabled in China News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.