World Suicide Prevention Day பொது அறிவு செய்திகள்
உலகம் முழுவதும் தற்கொலை சம்பவங்கள் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தனிப்பட்ட காரணங்கள், குடும்ப காரணங்கள் என பல்வேறு காரணங்களுக்காக பலர் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து வருகின்றனர்.
எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு கிடையாது. தற்கொலையால் எந்த பிரச்சினையும் தீரப்போவதில்லை. தற்கொலையை தடுக்கும் வகையில் உலக நாடுகள் உலக சுகாதார அமைப்புடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
மனநல ஆலோசனை, கலந்தாய்வு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு வழிகளில் தற்கொலை எண்ணங்களை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் 2003ம் ஆண்டு முதல் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
அதன்படி, ஆண்டு தோறும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
Kidhours – World Suicide Prevention Day
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.