Thursday, September 19, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலக ஆடம்பர நகரங்களின் பட்டியல் World Luxury Cities

உலக ஆடம்பர நகரங்களின் பட்டியல் World Luxury Cities

- Advertisement -

World Luxury Cities  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

ஆடம்பர வாழ்க்கைக்கு, அதிக செலவுமிக்க நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜோலியஸ் பெர் என்பவரின் லைப்ஸ்டைல் இண்டக்ஸ் என்ற நிறுவனம், உலகில் உள்ள ஆடம்பர வாழ்க்கைக்கான அதிக செலவுமிக்க நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அந்தவகையில், வதிவிட சொத்துக்கள், மகிழுந்துகள், வணிக விமான பயணங்கள், வர்த்தக கல்லூரிகள் மற்றும் ஆடம்பர வசதிகளுடன் கூடிய இடங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து 25 நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த நகரம் 5 ஆவது இடத்தில் இருந்தது.

- Advertisement -

2 ஆவது மற்றும் 3 ஆவது இடத்தில் முறையே, சீனாவின் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் நகரங்கள் உள்ளன.
டந்த ஆண்டு 2 ஆவது இடத்தில் இருந்த பிரிட்டன் தலைநகர் லண்டன் இந்த ஆண்டு 4 ஆவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

World Luxury Cities  பொது அறிவு செய்திகள்
World Luxury Cities  பொது அறிவு செய்திகள்

அதேபோல் கடந்தாண்டு 11 ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் நியுயோர்க் நகரம் இந்தாண்டு 5 ஆவது இடத்துக்கு வந்துள்ளது.தொடர்ந்து குறித்த பட்டியலில் 6 ஆவது இடத்தில் மொனாகோவும், 7 ஆவது இடத்தில் ஐக்கிய அரபு எமீரேட்சின் துபாயும், 8 ஆவது இடத்தில் தைவான் தலைநகர் தைபேயும், 9 ஆவது இடத்தில் பிரேசிலின் சா பாலோவும், 10 ஆவது இடத்தில் அமெரிக்காவின் மியாமியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, 11 ஆவது இடத்தில் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கும், 12 ஆவது இடத்தில் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவும், 13 ஆவது இடத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசும், 14 ஆவது இடத்தில் சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சும், 15 ஆவது இடத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவும் பிடித்துள்ளன.

 

Kidhours – World Luxury Cities

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.