World Large Binoculars பொது அறிவு செய்திகள்
உலகின் மிகப் பெரிய இரு கண் தொலைநோக்கி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டேவிட் கிப்னேய் என்ற நபர் இவ்வாறு தொலைநோக்கி ஒன்றை உருவாக்கி வருகின்றார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக தாம் வானியல் ஆய்வாளராக கடமையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.19 ஆண்டுகளாக இந்த இரு கண் தொலைநோக்கியை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்காக 400000 டொலர்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.பகல் நேரத்திலும் இரவிலும் இதனைப் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் வானை பார்வையிடக் கூடிய வசதிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Kidhours – World Large Binoculars
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.