World High Wage Grant Country பொது அறிவு செய்திகள்
உலகம் முழுவதும் சராசரி மாதச் சம்பளம் குறித்து தகவல்களை உலக புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விபரங்கள் வெளிவந்துள்ளன.
இதன்படி உலகம் முழுவதும் 23 நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் சராசரியாக ரூ.1 லட்சத்திற்கும் மேல் மாதச் சம்பளம் பெறுகின்றனர்.
உலகளவில் தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் அளிக்கும் முதல் 10 நாடுகளில் சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐஸ்லாந்து, கட்டார், டென்மார்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன இடம்பெற்றுள்ளன.
முதலிடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தில் சராசரி மாதச் சம்பளம், 6,096 டொலர் அதாவது இலங்கை மதிப்பில் ரூ.19 லட்சத்து 30 ஆயிரத்து 143 ஆக உள்ளது.
லக்ஸம்பர்க்கில் ரூ.15,87,841 ஆகவும், சிங்கப்பூரில் ரூ.15,79,611 ஆகவும் அமெரிக்காவில் ரூ.13,44,045ஆகவும், ஐஸ்லாந்தில் ரூ. 12,68,690ஆகவும் உள்ளது.
இந்தியாவில் சராசரி மாதச் சம்பளம் ரூ.50 ஆயிரத்திற்கும் கீழ், அதாவது இலங்கை மதிப்பில் ரூ.1,81,413 ஆக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சராசரி மாதச் சம்பள நாடுகள் பட்டியலில், இந்தியா 65ஆவது இடம் பிடித்துள்ளது.
இந்தியாவை விட குறைந்த சராசரி மாதச் சம்பளம் தரும் நாடுகளில் இலங்கை, துருக்கி, பிரேசில், ஆர்ஜெண்டினா, கொலம்பியா,பங்களாதேஷ், வெனிசுலா, நைஜீரியா, எகிப்து, பாகிஸ்தான் ஆகிய இடம்பெற்றுள்ளன.
Kidhours- World High Wage Grant Country
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.