Friday, December 20, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகின் விலையுயர்ந்த மை எந்த நாட்டில் தெரியுமா ? World Expensive Ink

உலகின் விலையுயர்ந்த மை எந்த நாட்டில் தெரியுமா ? World Expensive Ink

- Advertisement -

World Expensive Ink  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஜப்பானில் ‘Shodo’ என அழைக்கப்படும் எழுத்துக்களை மிக அழகாக எழுதும் Calligraphy முறையானது, கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு வசீகரிக்கும் கலை வடிவமாகும்.

இந்த அழகான பழங்கால நடைமுறைக்கு முக்கிய கதாபாத்திரமாகத் திகழ்வது அதற்கு பயன்படுத்தப்படும் மை தான்.

- Advertisement -

எனவே இந்த பதிவில் Japanese Calligraphy-க்கு பயன்படுத்தும் உலகிலேயே விலை உயர்ந்த மை பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.Sumi’ என அழைக்கப்படும் ஜப்பானிய கேளிகிராஃபி மை, பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது.

- Advertisement -

இது புராதான முறையில் தாவர எண்ணெய், பைன் பிசின் மற்றும் எள் எண்ணெயை எரிப்பது மூலமாகத் தயாரிக்கப்படுகிறது. இதை உருவாக்குவதற்கான செயல்முறை மிகவும் கடினமானது.

இந்த மையில் விரும்பிய தரம் மற்றும் நிலைத்தன்மையை அடைய திறமையானவர்களின் பங்களிப்பு மிக முக்கியம். குறிப்பாக இதில் இயந்திரங்களின் பங்களிப்பு இல்லாமல் முழுக்க முழுக்க மனித உழைப்பில் உருவாக்கப்படுகிறது.இதில் பயன்படுத்தப்படும் நிறமிகள் அரிதாகக் கிடைப்பவை.மற்றும் பிரீமியம் ரக பைண்டர்கள் உட்பட அனைத்துமே விலைமதிப்பற்ற பொருட்களின் கலவையில் இந்த மை தயாரிக்கப்படுகிறது.

பலவிதமான நிறங்களைப் பெறுவதற்கு பலவிதமான எண்ணெய்களை எரிக்கின்றனர்.

குறிப்பாக நீல நிறத்தைப் பெறுவதற்கு பைன் மரம் எரிக்கப்பட்டு அதன் மூலமாக வெளிப்படும் புகை மற்றும் பிசின் சேகரிக்கப்படுகிறது.எனவே சுமி மையைத் தயாரிப்பது ஒரு நீண்ட நடைமுறையாகும்.உலகின் விலையுயர்ந்த Japanese Calligraphy மை, ‘Bokuju’ என அழைக்கப்படுகிறது.

World Expensive Ink  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
World Expensive Ink  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த மை அதன் தரம், செயல்முறை மற்றும் மிக நேர்த்தியாக தயாரிக்கப்படும் விதத்திற்காக அதிக விலை உயர்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.குறிப்பிட்ட கைவினைக் கலைஞர்களால் தலைமுறை தலைமுறையாக பல நுட்பங்களைப் பயன்படுத்தி முழுவதும் கையாலேயே Bokuju-வை தயாரிக்கின்றனர்.

இந்த வகை மைகளைத் தயாரிக்க குறைந்தது 4 ஆண்டுகளாவது ஆகும். 200 கிராம் உயர்தர மையின் விலை 1000 முதல் 2000 டாலர்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது.

 

Kidhours – World Expensive Ink

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.