Saturday, March 29, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலக பொருளாதாரம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை! World Economic Trending

உலக பொருளாதாரம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை! World Economic Trending

- Advertisement -

World Economic Trending  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலக பொருளாதாரமானது சரிவை எட்டி வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றது.

சமீபத்தில் அமெரிக்க அரசுக்கு ஏற்பட்ட கடன் உச்சவரம்பு நெருக்கடி சர்வதேச நிதி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

- Advertisement -

உலகமே கண்டு வியக்கும் பெரும் பணக்கார நாடு, பொருளாதார வல்லரசு நாடு என்பன போன்ற பெருமைகளைக் கொண்ட அமெரிக்காவை ஆளும் ஜோ பைடன் அரசு செலவிடப் பணம் இல்லாத நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருக்கிறது போன்ற செய்திகள் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியது.

- Advertisement -

முன்னதாக, இலங்கை அரசாங்கம் நிதி நெருக்கடியில் சிக்கியது, அதனால் மக்கள் கிளர்ச்சி வெடித்தது, அதனை சமாளிக்க உலக வங்கி, இந்தியா போன்ற நட்பு நாடுகளிடம் கடன் பெற்றது, அதனை தொடர்ந்து பாக்கிஸ்தான் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்தது போன்ற பொருளாதார பிரச்னைகளை சந்தித்த நாடுகளின் நிலைமைகளைக் காண முடிந்தது.

World Economic Trending  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
World Economic Trending  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதற்கிடையில், உலக அளவில் பொருளாதாரம் ஒரு சரிவை சந்திக்கும் என பல்வேறு நிதி ஆதார அமைப்புகளும் பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்திருந்தன.

உலக அளவிலான சில முக்கியமான வங்கிகள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் பொருளாதார சரிவை சந்தித்து மட்டுமல்லாமல் சிலிகான் வேலி வங்கி, சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சூயஸ் வங்கி போன்ற உலகின் புகழ்மிக்க வங்கிகள் திவாலானது.

அத்தோடு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஆல்பபெட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் மொத்தமாக 4.6 டிரில்லியன் டொலர் அளவிற்கு சந்தை மதிப்பு இழப்பை சந்தித்துள்ளன.

இதுமட்டுமல்லாமல், மெட்டா, எக்ஸ் தளம் (ட்விட்டர்), கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் நிதி நிலமையை சமாளிக்க ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது.

இந்த வரிசையில், இந்தியாவில் ஆடியோஸ்ட்ரீமிங் சந்தையில் சுமார் 26 சதவீத பங்கை கொண்டுள்ள ஸ்பாட்டிஃபை ஆட்குறைப்பை நடவடிக்கையில் இறங்கியது மட்டுமல்லாமல் 17 சதவீத ஊழியர்கள் உடனடியாக வேலையை விட்டுச் செல்லுங்கள் என்று தலைமை நிர்வாக அதிகாரி டேனியல் ஏக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலக பொருளாதாரம் வியத்தகு அளவில் குறைந்துள்ளதோடு, மூலதனங்களின் விலை உயர்வு ஆகிய காரணிகளால் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Kidhours – World Economic Trending

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.