Sunday, December 1, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகின் பழமையான நாடுகளின் பட்டியல் World Ancient Countries

உலகின் பழமையான நாடுகளின் பட்டியல் World Ancient Countries

- Advertisement -

World Ancient Countries  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

1.ஈரான்
உலகின் மிகவும் பழமையான நாடு என்றால் அது இரான் ஆகும். இங்கு முதல் முதலாக அரசவை 3200 BCE முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவை போன்றே பழமையான கலாச்சாரம் நிறைந்த நாடாக ஈரான் உள்ளது.

2.எகிப்து
பழமை என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வரும் நாடு எகிப்து. அங்கு அரசவை முதல் முதலாக 3100 BCE முதல் அமைக்கப்பட்டது. அதற்கு அங்கு கட்டப்பட்டுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிட் ஒரு சிறந்த உதாரணம். முற்கால உலக அதிசயங்கள் பட்டியலிலும் தற்போதைய உலக அதிசயங்கள் பட்டியலிலும் இடம்பெறும் ஒரே ஒரு கட்டமைப்பு இந்த பிரமிட் மட்டுமே

- Advertisement -

3.வியட்நாம்
ஆசியாவின் பழமையான நாடாக வியட்நாம் உள்ளது. இங்கு பல நாடோடி குழுக்களாக வாழ்ந்துவந்த மக்கள் பின்னர் ஒரே அரசாட்சியில் 2879BCE முதல் வந்தனர். இந்த நாடு தற்போது வரை கலாச்சாரம் மிகுந்த நாடாக உள்ளது.

- Advertisement -

4.அர்மேனியா
ஆசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அர்மேனியா பழமையான கலாச்சாரம் மிகுந்த ஒரு நாடாக பார்க்கப்படுகிறது. இங்கு முதல் முதலாக அரசவை 2492 BCE காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்றளவும் பழமையான கல்வெட்டுகள் பல கிடைக்கின்றன.

World Ancient Countries  பொது அறிவு செய்திகள்
World Ancient Countries  பொது அறிவு செய்திகள்

5 கொரியா
தற்போது DPRK (Democratic People Republic of Korea) மற்றும் தென் கொரியா என்று அழைக்கப்படும் கொரியா உலகின் பழமையான நாடுகளில் ஒன்று என்றால் நம்பமுடிகிறதா?. இங்கு முதல் முதலாக ‘Goguryeo’ என்ற அரசு இருந்ததாகவும் அதன் காரணமாகவே கொரியா என்ற பெயர் அதற்கு கிடைத்ததாகவும் வரலாறு கூறுகிறது

6.சீனா
சீனாவின் பெரும் சுவரை யாரால் மறக்கமுடியும். இந்த நாடு முதல் முதலாக ஷாங் அரசால் ஆட்சி செய்யப்பட்டது. இங்கு முதல் பேரரசராக குவின் ஷி ஹுவாங் இருந்துள்ளார். இங்கு முதல் முதலாக அரசவை 2070 BCE முதல் அமைக்கப்பட்டது.

7.இந்தியா
ஆசியாவின் துணைக்கண்டமாக இருக்கும் இந்தியாவில் ஒரே ஆட்சி இல்லை என்றாலும் பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். குறிப்பாக ஹிந்து மதம் தொடங்கியதில் இருந்து வேத காலம் வரை பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். தற்போதைய இந்தியாவில் 1947 முதல் ஆட்சி தொடங்கினாலும். பண்டைய இந்தியாவில் வரலாற்றுப்படி முதல் முதலாக 2000 BCE முதல் ஆட்சி தொடங்கியதாக பதிவுகள் உள்ளன.

​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

 

Kidhours – World Ancient Countries

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.