Weddings Dress Guinness Record பொது அறிவு செய்திகள்
இத்தாலியில் பிரபல திருமண ஆடை தயாரிக்கும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட திருமண ஆடை ஒன்று பழைய கின்னஸ் சாதனை ஒன்றை முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்வரோவ்ஸ்கி படிகங்களுடன் தைக்கப்பட்ட ஒரு நேர்த்தியான திருமண ஆடை தற்பொழுது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றது.
கடந்த மாதத்தில் மிலனில் நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில் குறித்த ஆடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 50,890 ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆடையின் கரவிக்கையில் ஆயிரக்கணக்கான படிகங்கள் 200 மணித்தியாலம் அதற்காக மட்டும் செலவிட்டு தைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதற்கு முன்னர் இஸ்தான்புல்லில் 45 ஆயிரம் படிகங்களுடன் ஒரு ஆடையினை துருக்கியை சேர்ந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்திருந்த நிலையில் அதனையே தற்போது இந்த ஆடை முறியடித்துள்ளது.
Kidhours- Weddings Dress Guinness Record
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.