Unbridged River பொது அறிவு செய்திகள்
உலகில் காணப்படுகின்ற ஆறு நதிகளில் பெருமளவான பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன அதாவது நதி என்றால் அதன் குறுக்கே பாலம் பகட்டப்பட்டிருக்கும். அதன் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கடந்து செல்வதற்கு அந்த பாலத்தின் தேவை அவசியமானதாக இருக்கும். நதியின் இரு பகுதியிலும் மக்கள் வசிப் பது அதற்கு காரணமாக இருக்கும். ஆனால் அப்படி அவசியம் எழாதபட்சத் தில் பாலம் அமைக்கப்படாது.
பல கிலோ மீட்டர் தூரம் நீண்டு செல்லும் நதியாக இருந்தால் அதன் குறுக்கே அமைக்கப் படும் பாலங்களின் எண்ணிக்கை அதிக மாக இருக்கும். ஆனால் ஒரு பாலம் கூட கட்டப்படாமல் நீண்ட தூரம் பயணிக்கும் நதி என்ற சிறப்புக்குரியது. அமேசான் நதி.
இத்தனைக்கும் அந்த நதி 6,992 கிலோமீட்டர் (4,345 மைல்கள்) தூரம் ஓடுகிறது. வெள்ளத்தின்போது சில இடங் களில் நதியின் அகலம் சுமார் 10 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கிறது.அந்த இடங்களில் இரு கரைகளையும் தொட்டபடி நதி பாய்ந்தோடுவதை பார்க்கும்போது கடல் போல் பிரமாண்டமாக காட்சி அளிக்கும்.
உலகில் பெரிய நதியான இந்த நதியில் பாலம் கட்டாமல் இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அமேசான் நதி படுகை மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்டது. அங்கு வசிப்பவர்கள் நதியை கடப்பதற்கு பாலம் தேவைதான். ஆனால் அமேசான் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சமயங்களில் ஆற்றின் வழித்தடம் மாறக்கூடும். அதனால் ஆற்றின் குறுக்கே பெரிய பாலங்கள் கட்ட முடிவதில்லை.
மேலும் சதுப்பு நிலம், அடர்ந்த மழைக்காடுகள், நிலை வற்ற ஆற்றுப்படுக்கை என கடினமான நிலப்பரப்பை கொண் டிருப்பதால் பாலம் கட்டுவதும் சவாலான விஷயமாகவே இருக் கிறது. அத்துடன் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவது சுற்றுச் சூழல் அமைப்புகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற
கருத்தும் நிலவுகிறது.
அங்கு அடர்த்தியான மரங்கள், செடி, கொடிகளுடன் பல்லுயிர் பெருக்கம் கொண்ட சுற்றுச்சூழல் சூழ்ந்த பகுதியை சிதைந்து பாலம் கட்டுவதற்கு அரசாங்கமும் விரும்பவில்லை. அதனால் பாலம் இல்லாத நதியாக அமேசான் விளங்குகிறது.
இங்கு திக காலம் வசிக்கும் மக்கள் நதியை கடப்பதற்கு படகுகளை பயன்படுத்துகிறார்கள். அதேவேளையில் அமேசானில் துணை நதிகளில் சிறு சிறு பாலங்கள் கட்டப் பட்டிருக்கின்றன.
Kidhours – Unbridged River
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.