Saturday, November 9, 2024
Homeசிறுவர் செய்திகள்இன்று நிலவில் களமிறங்குகிறது சந்திராயன் -3 Today Landing Santhiraayan 3

இன்று நிலவில் களமிறங்குகிறது சந்திராயன் -3 Today Landing Santhiraayan 3

- Advertisement -

Today Landing Santhiraayan 3

- Advertisement -

சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் நிகழ்வு இஸ்ரோ இன்று மாலை நேரலையில் ஒளிபரப்புகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த (14.08.2023) ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
பின்னர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்த சந்திரயான் 3-ன் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ திட்டமிட்டபடி இன்று(23.08.2023) மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இந்த நிகழ்வைக் காண உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
“சந்திராயன்-3”-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் காட்சி இன்று மாலை 5.20 மணி முதல் இஸ்ரோவின் இணையதளம், இஸ்ரோ ஃபேஸ்புக் பக்கம் மற்றும் அரசு தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

முன்னதாக கடந்த (20.08.2023)ஆம் தேதி விக்ரம் லேண்டர், நிலவை 70 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Kidhours- Today Landing Santhiraayan 3

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.