Friday, December 27, 2024
Homeசிறுவர் செய்திகள்இஸ்ரோவின் புதிய சந்திரயான் 4 - Santhiraayan 4

இஸ்ரோவின் புதிய சந்திரயான் 4 – Santhiraayan 4

- Advertisement -

Santhiraayan 4 in Isro  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது.

நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படவுள்ள சந்திரயான் 4, அங்கிருந்து சில மாதிரிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளதாக இஸ்ரோவின் தலைவர் எஸ். சோம்நாத் (S. Somnath) தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சந்திரயான்-4 (Chandrayaan 4) திட்டம் வெற்றி பெற்றால், சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை கொண்டு வரும் நான்காவது நாடாக இந்தியா (India) பெயரிடப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரோவின் சந்திரயான் 3 (Chandrayaan 3) விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கி சாதனை படைத்தது.இந்த நிலையில், இந்தியா தனது அடுத்த கட்ட செயல்பாட்டை நிகழ்த்துவதற்காக சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்தி வருவதாக சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இந்த திட்டத்துக்கமைய, சந்திராயனின் முதல் பாகமான புரொபஷனல் ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து சென்றவுடன், அது சந்திரனை நோக்கி பயணிக்க உதவும்.

அடுத்த கட்டமான டிசென்டர் நிலவில் தரை இறங்குவதற்காக உதவும். பின்னர் அதிலிருந்து வெளியேறும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் உள்ள சில மாதிரிகளை சேகரிக்கும். இந்த மாதிரிகள் பூமிக்கு அனுப்பி வைக்கப்படும். சந்திரயான் 4 தற்போது வளரும் பணியில் உள்ளது.

Santhiraayan 4 in Isro  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Santhiraayan 4 in Isro  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலுக்கமைய, சந்திரயான் 4 திட்டம் 2040 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிலவில் தரையிறங்கும் இலக்கை கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.