Polar Bears Habits தேடல்
பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஓர் உயிரினம் பனிக்கரடி. பெரும்பாலும் நிலத்தில் பிறந்தாலும் பனிக் கட்டிகள் தான் இதன் இருப்பிடம். பருவநிலை மாற்றத்தால் பனிக்கரடி இருப்பிடங் ணாமல் போவது துயரம்.
பனிக்கரடிகளுக்கே உரித்தான வினோதமான வழக்கம் ஒன்றை மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பொதுவாக பனிக்கரடிகள் உறைபனி வருவதற்கு ‘முந்தைய மாதங்களில், அளவுக்கு அதிகமாக இரைகளை உண்கின்றன பின் கடுமையாக பனி கொட்ட ஆரம்பித்ததும் தங்களின் குகைகளுக்குள் போய் ஒடுங்கிக் கொள்கின்றன.
இந்த நிகழ்வை ‘ஹைபர்னேஷன்’ என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். குகைக்குள்ளேயே நீண்ட உறக்கம், அசைவில்லாமல்படுத்திருப்பது என்று நான்கு மாதங்கள் கழித்து, இளைத்துப் “போய் வெளியே வரும். அந்த நான்கு மாதங்களில், உயிர் வாழ அது, உடலில் உள்ள மிகையான கொழுப்பை பயன்படுத்திக் கொள்ளும்,

விஞ்ஞானிகளுக்கு ஒரு ஆச்சரியம் என்னவெனில், பனிக்கரடி தசைகளுக்கு வேலை கொடுக்காமல் பல மாதங்கள் இருந்தாலும், தசைகளின் செயல்பாடு பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாகவே இருப்பது எப்படி என்பது தான்.
அண்மையில், அமெரிக்காவிலுள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஹைபர்னேஷனில் இருக்கும் வழக்கமுள்ள சில அணில், எலி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளை ஆராய்ந்தனர். அதில், அவற்றின் மரபணுவில் உள்ள தனித் தன்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.
இதை, பூமியிலிருந்து செவ்வாய் போன்ற கோள்களுக்கு பயணிக்கும் விண்வெளி வீரர்கள், பல மாதங்கள் அசையாமல் படுத்திருக்க நேரும் நோயாளிகள் போன்ற வர்களின் தசைகளில் பாதிப்புகளைத் தடுக் கப் பயன்படுத்தலாம் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்
Kidhours – Polar Bears Habits
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.