Plastic Free Environment சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சிறிய பிளாஸ்டிக் கவர் தானே என நாம் நினைப்போம். ஆனால் அதனால் நமது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை நினைத்துப் பார்த்தால் பயங்கரமாக இருக்கிறது. ஒரு தடவை மட்டுமே உபயோகப்படும் இந்த பிளாஸ்டிக்கால் உலகமே குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது.
இந்தக் கழிவுகளை குறைக்க நாம் எடுக்கும் சிறு முயற்சிகள் கூட பூமியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பிளாஸ்டிக் பிரச்னையை தடுக்க, அப்படியொரு புதுமையான ஒரு முயற்சியை நாகலாந்து மாநிலம் எடுத்துள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெம்ஜென் இம்னா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாகலாந்தில் எப்படி பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கை முறையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் பேக்கேஜ் செய்யப்படுகின்றன என இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
நாம் பெரும்பாலும் தினசரி இந்தப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் தான் வாங்கி வருகிறோம். ஆனால் நாகலாந்தில் அப்படி வாங்க முடியாது. இலைகளை பயன்படுத்தி உணவு பொருட்கள் அழகாக பேக்கேஜ் செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்கு இதுவொரு அற்புதமான வழியாகும்.
அமைச்சர் தெம்ஜென் இம்னா சமூக ஊடகத்தில் பிரபலமானவர். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவார்ந்த மற்றும் ஜாலியான வீடியோக்கள் பலவற்றை பகிரக் கூடியவர். இவரது பதிவுகளை பலரும் ஆர்வமாக படிப்பதோடு மற்றவர்களுக்கும் பகிர்வார்கள். எப்போதும் போலவே இந்த முறையும் சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு நாளை முன்னிட்டு அற்தமான வீடியோ ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் .
Kidhours – Plastic Free Environment
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.