Piranha Fish in Tamil சிறுவர் சிந்தனைகள்
ஆங்கில படங்கள் பிரானா (piranha) மீனைப் பற்றி பல பீதியான கதைகளைக் கிளப்பியுள்ளன. ஆனால் நிஜத்தில் பிரானா மீன்களின் குணங்கள் பற்றி பார்ப்போம்
பிரானா என்றால் அமேசான் பழங்குடி மொழியில் மீன் பல்’ என்று அர்த்தம். இவை தென் அமெரிக்க ஆறுகளில் காணப்படுகின்றன.சில வகை பிரானாக்கள் வட அமெரிக்க ஆறு, ஏரிகளிலும் வங்காள தேசத்தின் காப்டை ஏரியிலும் காணப் படுகின்றன.
பிரானாவின் உடல் வெள்ளி நிறத்தில் சிவப்பு புள்ளிகளுடன் காணப் படும். இதனால் இவை சேற்றில் எளிதாக ஒளிந்து வாழும். பிரானா மீன்கள் ரத்த வெறி பிடித்தவை என்று பலர் எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் பிரானாக்கள் அனைத் துண்ணிகள் ஆகும். நத்தை, மீன், கடல் உயிரினங்களு டன் தாவரங்கள், விதைகள், பழங்க ளையும் சாப்பிடும்.
சில சமயங்களில் நீரில் விழும் பாலூட்டிகளையும் பறவைகளையும் உண்ணும், ஆனால், இந்த இரைகள் அடிக்கடி கிடைக்காது.
பிரானாவுக்கு சட்டி போன்ற கூர்மையான பல் வரிசை உண்டு.இந்தப் பற்களால் பற்களால் இரும்பு இரும்பு ஹூக்கைக் கூட கடித்து விடும்.இதன் தாடை எலும்பு மிகவும் வலுவானது. அதன் உடல் எடையை விட 30 மடங்கு அழுத்தத்துடன் கடிக்கக் கூடிய திறன் வாய்ந்தவை. ஒரு மனிதனின் கையை 5-10 நொடியில் நசுக்கி விடும்.
பிரானாவின் பற்களை வைத்து உள்ளூர் குடி மக்கள் ஆயுதங்கள் செய்வர்.
பிரானாக்கள் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 1000 மீன்கள் வரை இருக்கும்.
திகில் படங்களில் பிரானா மீன் கள் சில நொடிகளில் ஒரு மனித உடலைத்தின்பதாகக் காட்டுவர். ஆனால் உண்மையில் அவை பெருங்கூட்டமாக இருந்தபோ தும், பெரிய இரைகளை உண்ண நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.
எல்லா பிரானா மீன்களுமே, பயங்கரமானவை இல்லை. சைவ பிரானா இன மீன்களும் உண்டு, அமேசான் ஆற்றில் வாழும் 20 இனங்களில், சில வகை மட்டுமே கொலைகார மீன்கள். இதில் சிவப்பு வயிறு பிரானாக்கள் மிகவும் பயங்கரமானவை.
சுறாக்களைப் போல் பிரானாக் களுக்கும் விசேஷ மோப்ப சக்தி உண்டு. இதன் மூலம் நீரில் கலந்துள்ள ரத்த வாடையை உடனே
கண்டுபிடித்து விடும்.மாமிசம் கிடைக்காவிட்டால், பிரானா மீன்கள் தங்களுக்குள் ளேயே சண்டையிட்டு, சக மீன் களைக் கொன்று தின்னும்,
பெண் மீன் 5000 முட்டைகள் வரை இடும். ஆணும் பெண்ணும் இணைந்து முட்டைகளை அடை காக்கும். இதற்கு பலனாக 90 சதவீதம் முட்டைகள் குஞ்சு பொரிக்கும்.
Kidhours – Piranha Fish in Tamil
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.