Oldest person in the world பொது அறிவு செய்திகள்
உலகிலேயே மிகவும் வயதானவராக அறியப்படும் லூசில் ராண்டன் பிரான்ஸின் துலான் நகரிலுள்ள முதியோர் இல்லத்தில் தனது இறுதி நாட்களை கழித்து வந்தார். இந்த நிலையில் உறங்கிக்கொண்டிருக்கும்போதே அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு தற்போது வயது 118.
“சிஸ்டர் ஆண்ட்ரே காலமானது எங்களுக்கு பெரும் சோகம்தான். ஆனால், அவர் மரணத்தை எதிர்பார்த்திருந்தார். தனது சகோதரருடன் சேர வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறியது. இது அவருக்கு ஒரு வகையில் விடுதலைதான்” என்று அவர் தங்கியிருந்த முதியோர் இல்லம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
![உலகில் மிக வயதான நபர் Oldest Person in the World 1 Oldest person in the world பொது அறிவு செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/01/Untitled-design-2023-01-19T204200.970.jpg)
சிஸ்டர் ஆண்ட்ரே என்று அழைக்கப்படும் கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் முதலாம் உலகப் போருக்கு முன்பாக 1904ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி தெற்கு பிரான்சில் பிறந்தார்.
ராண்டன் பிறந்தபோதுதான் நியூயார்க் நகரின் முதல் சுரங்கப் பாதை திறக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் புகழ்பெற்ற மிதிவண்டி போட்டியான டூர் தி பிரான்சு ஒருமுறை மட்டுமே நடைபெற்று இருந்தது.
இவருக்கு மூன்று சகோதரர்கள். தனது 26வது வயதில் கத்தோலிக்க கிறிஸ்தவராக மாறி ஞானஸ்தானம் பெற்றார். 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் சமயத்தில் தனது 41வது வயதில் கன்னியாஸ்திரியான அவர், ஸ்பானிஷ் காய்ச்சல், கொரோனா என இரண்டு பெருந்தொற்றுகளையும் சமாளித்து மீண்டு வந்தவர்.
இரண்டு உலகப் போர்களையும் சந்தித்து தப்பிப் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Oldest person in the world
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.