Nobel Prize in Physics பொது அறிவு செய்திகள்
2023 ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு Pierre Agostini, Ferenc Krausz , Anne L’Huillier ஆகிய மூவர் கூட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பருப்பொருளில் உள்ள எலக்ட்ரான் இயக்கவியல் தன்மை குறித்த ஆய்வு செய்ய மிக குறுகிய கால ஒளி வெடிப்பை (attosecond pulses of light) உருவாக்கும் சோதனை முயற்சிக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளின் கீழ் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அந்த வகையில், நடப்பாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த கேட்டலின் கரிக்கோ மற்றும் வீய்ஸ்மேன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நியூக்ளியோசைடு மூலக்கூறுகள் மாற்றம் தொடர்பாக இவர்களின் கண்டுபிடிப்பு கொரோனா நோய்த் தொற்றின் போது, எம்ஆர்என்ஏ தடுப்பூசி தயாரிக்கப்பட்ட காரணமாக அமைந்ததாக நோபல் பரிசு கமிட்டு தெரிவித்தது
Kidhours – Nobel Prize in Physics
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.