World Record Dog பொது அறிவு செய்திகள்
நம்முடைய வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் எல்லாம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை அதிகபட்சம் உயிர்வாழும். ஒரு சில நாய் இனங்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கும். 23 ஆண்டுகள் வாழ்ந்து வரும் அமெரிக்க நாய் ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
ஸ்பைக் என்று பெயரிடப்பட்டுள்ள சிவாவா இன கலவை நாய் ஒன்று 23 ஆண்டுகள் 7 நாட்கள் வாழ்ந்து உலக சாதனை பிடித்துள்ளது. பொதுவாக சிவாவா இனத்தில் உள்ள நாய் 12-18 ஆண்டுகள் உயிர் வாழும். அதன் கலப்பு இனங்கள் கொஞ்சம் கூடுதல் நாட்கள் உயிரோடு இருக்கும்.
Say hello to the new oldest dog in the world! 🥰️
Spike, who lives with human Rita Kimball in Ohio, is 23 years and 7 days old. pic.twitter.com/iTGKegBBN9
— Guinness World Records (@GWR) January 19, 2023
லாஸ் ஏஞ்சல்ஸில் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ,ஜினோ என்ற 22 வயதான சிவாவா கலப்பு நாய் , உலகின் மிக வயதான நாய் என்று பெயரிடப்பட்டது. அதன் பின்னர் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஸ்பைக் அந்த சாதனையை முறியடித்துள்ளது. 2022 வது ஆண்டில் வயதான நாய் என்று உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ள நான்காவது நாயாக ஸ்பைக் உள்ளது.
நவம்பர் 1999 இல் பிறந்த ஸ்பைக் 2010-ம் ஆண்டு தற்போதைய உரிமையாளரின் கைகளுக்கு வந்துள்ளது. ரீட்டா கிம்பால் என்பவர் ஸ்பைக்கை மளிகைக் கடையின் வாகன நிறுத்துமிடத்தில் அடிபட்ட நிலையில் கண்டறிந்துள்ளார். பின்னர் அதை தத்தெடுத்து இன்று வரை வளர்த்து வருகிறார்.
பார்ப்பதற்கு சிறிய நாயாக இருந்தாலும் பெரிய நாயிடம் உள்ள துணிவும் தைரியமும் இதனிடம் காணப்பட்டது. அதனால் தான் ஸ்பைக் என்று பெயர் வைத்தோம். வயதாவதால் கண்பார்வை மங்கிவிட்டது. ஆனால் கோடை கால வார இறுதிகளில் ஸ்பைக் நீண்ட நடைப்பயணத்தை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டும் என்கிறார் ரீட்டா கிம்பால்.
Kidhours – World Record Dog
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.