World Biggest Trainway Station பொது அறிவு செய்திகள்.
உலகெங்கிலும் பல ரயில் நிலையங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனக்கென சில சிறப்புகளைக் கொண்டுள்ளன. அப்படி பார்க்கையில் உலகின் மிக நீளமான நடைமேடை கொண்ட ரயில் நிலையம் நம் இந்தியாவில் உள்ளது. கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளி ரயில் நிலையத்தில் உலகின் மிக நீளமான நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமை அந்த நடைமேடையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்த நடைமேடையின் நீளம் 1,507 மீட்டர். கிட்டத்தட்ட ஒன்றை கிலோமீட்டர் நீளம். அதே போல் நம் நாட்டின் மிகப்பெரிய ரயில் நிலையம் எது என்று கேட்டால், அது ஹவுரா சந்திப்பு. இங்கு 26 நடைமேடைகள் உள்ளன. ஆனால் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எது தெரியுமா? இந்த ரயில் நிலையத்தின் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தின் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும். பரப்பளவில் மட்டுமின்றி, அதிகமான நடைமேடைகள் என அதன் பிரம்மாண்டம் குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.
ஒரு லட்சத்து 25,000 பயணிகள் இநத ரயில் நிலையம் வழியாக பயணிக்கின்றனர். இந்த ரயில் முனையத்தில் இரண்டு அண்டர் கிரவுண்ட் நிலைகள் உள்ளன. இங்கு 41 தடங்கள் மேல் மட்டத்திலும், 26 தடங்கள் கீழ் மட்டத்திலும் செல்கின்றன. இந்த நிலையம் 48 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ரகசிய நடைமேடை தளமும் கட்டப்பட்டுள்ளது.
இது வால்டோர்ஃப் அஸ்டோரியா ஹோட்டலுக்கு கீழே கட்டப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் சக்கர நாற்காலியின் உதவியுடன் நேரடியாக இந்த நடைமேடைக்கு வந்து தனது பயணத்தை மேற்கொள்வாராம். இதனால் அவர் பொதுமக்களையும் ஊடகத்தையும் எதிர்கொள்வதைத் தவிர்க்க முடியும் என்பதால் இந்த ஏற்பாடு. டிராக் 61 என்று அழைக்கப்படும் அந்த நடைமேடை இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.
Kidhours – World Biggest Trainway Station
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.